போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது


போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
x

போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் கலை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீஸ்காரர்கள் ராமலிங்கம், அருள்ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் கலை நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் அருள்ஜோதியை அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் திருநாவுக்கரசு (வயது 38) மற்றும் சின்னத்துரை மகன் கீர்த்தி வாசன் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கல்லை எடுத்து காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அருள்ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, கீர்த்திவாசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story