லாரி உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

விழுப்புரம் அருகே லாரி உரிமையாளரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ராசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 31), லாரி உரிமையாளர். இவரிடம் விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (28) என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் 6 மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜிடம் ரூ.2,500 கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பித்தரும்படி விஜயகுமாரிடம் மோகன்ராஜ் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், அவரது நண்பரான ராம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் (26) ஆகிய இருவரும் சேர்ந்து மோகன்ராஜை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மோகன்ராஜ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






