வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x

விக்கிரமங்கலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வெளிப்பிரிங்கியம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (44). இந்தநிலையில் கடந்த வாரம் வெளிப்பிரிங்கியத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் காமராஜூக்கும் அதே ஊரை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாபு செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாபுவின் மீது காமராஜ் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வி.கைகாட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் பாபுவை காமராஜ் மற்றும் அவரது நண்பர்களான ஆறுமுகம் (42), கமல் (25), வெங்கடேசன் (23) ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபுவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசில் பாபு அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், கமல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய காமராஜ், வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story