பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மனைவி விமலா(வயது 48). இவர் மளிகை கடை வைத்துள்ளார். விரியூர் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாலமன்(வயது 47). இவர் விமலாவின் கடையில் தண்ணீர் கேட்டுள்ளார். இதற்கு அவர் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த சாலமன் விமலாவை தாக்கிவிட்டு அருகில் உள்ள வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார்.
இதையடுத்து விமலா தனது உறவினர் மகேஸ்வரியுடன் அந்த வீ்ட்டுக்கு சென்று சாலமனை வெளியே அனுப்புமாறு கூறினார். அப்போது அங்கிருந்த தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விமலா மற்றும் மகேஸ்வரியை தி்ட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விமலா கொடுத்த புகாரின் பேரில் சாலமன், வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் தியாகராஜன்(37), மணி மகன் அப்பு(24), நசீர் மகன் தாகீர்அலி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன், அப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாலமன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.