பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நியூபெத்தலகேம் பகுதியை சேர்ந்தவர் ஏஸ். விக்னேஷ் (வயது 27). ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (23). இருவரும் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ், பிரியங்காவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியங்கா வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர்கள் பி.விக்னேஷ், மணிபாரதி ஆகியோர் எஸ்.விக்னேஷின் தாய் வெண்ணிலாவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.விக்னேஷ், மணிபாரதி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story