16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்ற 2 பேர் கைது


16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்ற 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவை உக்கடத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான 16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

கார்களை அடகு பிடித்து மோசடி

கோவையில் கார்களை அடகுபிடிப்பதாக நடந்த மோசடி தொடர் பாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேசன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். விசாரணையில் மோசடி செய்த கார்களை கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ரியாஸ் (வயது35) என்பவரிடம் கொடுத்ததாக வெங்கடேசன் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, ரியாசை (35) கைது செய்தார். இவர் 13 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

உதிரி பாகங்கள் விற்பனை

அதோடு ரியாஸ் கரும்புக்கடையை சேர்ந்த ரபீக் (42) என்பவரிடம் 3 கார்களை கொடுத்து உள்ளார். அந்த கார்களை ரபீக் உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

கைதான ரியாஸ், ரபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வகையில் மொத்தம் ரூ.1¼ கோடி மதிப்பிலான 16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்றது தெரிய வந்தது. இதனால் கார்களின் உரிமையாளர்கள் தற்போது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து வருகிறார்கள்.

நடவடிக்கை

கோவையில் இது போன்ற மோசடி நடைபெறுகிறதா? என்று தீவிர விசாரணை நடைபெறுகிறது. மேலும் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கார்களை வாங்குவது, அதை உடைத்து உதிரிபாகங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.



Next Story