தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன் (வயது 37), தொழிலாளி. இவர் நேற்று காவணிப்பாக்கத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் சாலாமேடு ரெயில்வே கேட் அருகே சென்றார். அப்போது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (35), மேல்அருங்குணத்தை சேர்ந்த பிரசன்னவெங்கடேஷ் (32) ஆகியோர் அவரை வழிமறித்து ரூ. 1,100-ஐ பறித்தனர். உடன் அக்கபக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் தமிழ்பாணடியன் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செய்தனர்.
Related Tags :
Next Story