மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2023 11:54 PM IST (Updated: 17 July 2023 12:37 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ஆம்பூர்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே நேற்று டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த குமார் (வயது 35), அலிம் (23) என்பதும், ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story