கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை போலீசார் குளித்தலை-தண்ணீர்பள்ளி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த குளித்தலை மலையப்பநகர் பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 22), பெரியபாலம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story