கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி போலீசார் நேற்று புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31), வையம்பாளையம் அருள் கார்டன் பகுதியை சேர்ந்த சீனு என்கிற பிரவீன் (26) என்பதும், அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





