கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று காலை கோட்டை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிந்தாமணி பூசாரி தெரு சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்த ரமேசின் மகன் ரவிச்சந்திரன்(வயது 22), மணியின் மகன் சதீஷ்குமார்(21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டை போலீசார், 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.