கஞ்சா விற்ற 2 பேர் கைது


தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கழுகாசலபுரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் கணேசன் (வயது 24), தூண்டி மகன் கருப்பசாமி (24) ஆகியோர் வே.பாண்டியாபுரம் பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார்களாம். இது குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story