கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேலப்பாளையம் மேத்தைமார்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 37) என்பதும் அவர் கஞ்சா விற்பதற்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் குறிச்சி வாய்க்கால் அருகே ரோந்து பணியில் இருந்த போது கஞ்சா விற்றதாக மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்த அப்துல் செரீப் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story