விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது


விழுப்புரத்தில்    கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 115 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வி.மருதூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 22), வி.மருதூர் வெங்கடகிருஷ்ணா லே-அவுட் பகுதியை சேர்ந்த ஸ்ரீதனுஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story