அஞ்சுகிராமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


அஞ்சுகிராமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடம் நான்கு வழி சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பழவூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 22), கன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஜெனிஸ் (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 1½ கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன், கஞ்சாவை எடை போட வைத்திருந்த எடை மிஷின், ரூ.5,700, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

===


Next Story