கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது
கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலடியில் உள்ள தனியார் மண்டபம் அருகே வேகமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது அந்த லாரிகளில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கிராவல் மண் கடத்தி வந்தது தொடர்பாக நடியப்பட்டு ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 41) மற்றும் கலர் குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ரவி (42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story