காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது


காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது
x

காரில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூருக்கு குட்கா கடத்தப்படுவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கனகம்மாசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளுரை நோக்கி, சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் குட்கா, புகையிலை பொருட்கள் 17 கிலோ இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குட்காவுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்திய திருவள்ளூர் ஆசூரி பகுதியை சேர்ந்த சத்ரராம் (வயது 30), ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை் சேர்ந்த ரமேஷ் (வயது 26) ஆகியோரை கைது செய்தனர்.

1 More update

Next Story