ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸ்காரர் சிவமுருகன் ஆகியோர் கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தொடர்பாக திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 50) மற்றும் வேலூர் மாவட்டம் சஞ்சீவிராயர்புரத்தை சேர்ந்த நாகராஜ் (60) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சியில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையில் ஒப்படைத்தனர்.


Next Story