வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 25). நேற்று முன்தினம் சேலம் வந்த இவர் குரங்குச்சாவடி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென ராஜதுரையை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராஜதுரையிடம் செல்போன் பறித்தது 4 ரோடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21), லோகேஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






