திருச்சியில் கோடை மழை


திருச்சியில் கோடை மழை
x

திருச்சியில் கோடை மழை பெய்தது:

திருச்சி

திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல்நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் புழுக்கம் அதிகரிப்பதால் மக்கள் அவதியுற்று வந்தனர். ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் இனி 2 மாத வெயிலை எவ்வாறு சமாளிப்பது என மக்கள் தவித்து வருகிறார்கள். வெயிலுக்கு மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே இளநீர் கடைகளும், குளிர்பான கடைகளும், தர்பூசணி கடைகளும் முளைக்க தொடங்கி விட்டன.

இந்தநிலையில் திருச்சியில் நேற்றும் வழக்கம்போல் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் திடீரென மழை பெய்தது. சிறிதுநேரம் மட்டுமே பெய்த இந்த மழையால் கோடை கால வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று மாலை பெய்த மழையின்போது, தில்லைநகர் 5-வது குறுக்குத்தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.


Next Story