பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டா கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படி மது குடித்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தனர். பின்னர் போலீசார் இருவரையும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது பொத்தேரி பகுதியில் பட்டா கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 19), ஆவடியை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story