வேனை திருடிய 2 பேர் கைது
வேனை திருடிய 2 பேர் கைது
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை பச்சார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). சம்பவத்தன்று தனது வேனை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். மறுநாள் காைல வந்து பார்த்த போது வேனை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வேனை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட வேன் தென்காசியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனை திருடியதாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story