ரெயிலில் கஞ்சா கடத்தி முயன்ற 2 பேர் கைது


ரெயிலில் கஞ்சா கடத்தி முயன்ற 2 பேர் கைது
x
தர்மபுரி

அரூர்

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கவிதா (பொறுப்பு) தலைமையில் மொரப்பூர் ரெயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைகளில் பைகளுடன் நின்ற 2 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டி பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கேரளா மாநிலம் கன்னூரை சேர்ந்த தீபக் (வயது 31), அருண் (26) என்பதும், ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story