பள்ளி மாணவர்கள் மோதலில் 2 பேர் கைது
ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி இரு வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் அவருடைய அண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 10 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி சென்று பிளஸ்-2 மாணவர்களை தாக்கியதில் பெங்களூருவை சேர்ந்த மாணவர் காயமடைந்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்காடு போலீசில் புகார் கொடுகப்பட்டது. அதன்பேரில் தகராறில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளியில் தகராறில் ஈடுபட்டதாக நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த நாகராஜ் மகன் சரவண அய்யப்பன் (வயது 22), பாளையங்கோட்டை பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்த முருகன் மகன் துரைராஜ் (23) ஆகிய 2 பேரை நெல்லையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஏற்காடு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.