உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது - 12 கேஸ் சிலிண்டர்கள் மீட்பு...!


உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது - 12 கேஸ் சிலிண்டர்கள் மீட்பு...!
x

உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்த வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யது குற்றவாளிகளை விரைந்து பிடிக்க டிஎஸ்பி தேன்மொழிவேல் உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.ஐ சந்திரமௌலி போலீசார் செல்வராஜ் நல்ல பெருமாள் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பழனி மருத்துவர் நகரை சேர்ந்த சக்திவேல் (41) கலிக்கநாயக்கன்பட்டி பிரவீன் குமார் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 கேஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story