பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது
சரவணம்பட்டியில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாணவர் கொலை
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளியின் அருகே உள்ள நூலகத்தின் முன்பு படுத்திருந்தார்.
அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை, அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். அப்போது அந்த மாணவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதை கண்ட சக மாணவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியி லேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
2 சிறுவர்கள் கைது
இதையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் நண்பர்கள் தாக்கிய தில் பிளஸ்-2 மாணவர் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிளஸ்-2 மாணவரின் நண்பரான 17 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-
போதையில் தகராறு
எங்களது நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். சம்பவத்தன்று நாங்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தினோம். போதை அதிகமானதும் அவர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினோம். ஆனால் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதன் காரணமாக அருகில் கிடந்த கட்டையால் தாக்கினோம். இதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே நாங்கள் 4 பேரும் தப்பி சென்றுவிட்டோம். அதன்பிறகு தான் அவர் இறந்ததை தெரிந்து கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.