பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது


பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 15 Sept 2023 1:00 AM IST (Updated: 15 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மெ.மெ வீதியை சேர்ந்தவர் வைரவன் (வயது 67). இவர் முடியரசனார் சாலையில் ராஜிவ் காந்தி சிலை அருகே பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் பெட்ரோல் விற்பனை பணம் ரூ.96 ஆயிரத்தை அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில். பெட்ரோல் பங்க் பணியாளர்கள் அயர்ந்து தூங்கி விட்டனர். நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. அதனுள் இருந்த பீரோ உடைந்த நிலையில் திறந்து கிடந்தது. இதனைக்கண்ட பங்க் பணியாளர்கள் அதன் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். பங்க் உரிமையாளர் வைரவன் வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.96 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story