திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்து
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாயின. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாயின. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் மோதி கொண்டன. இதனால் அரசு பஸ்சின் முன் பகுதியிலும், தனியார் பஸ்சின் பக்கவாட்டிலும் சேதம் ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை.
விபத்துக்குள்ளான 2 பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் சிறிது நேரம் நின்றதால் பஸ் நிலையத்திற்குள் வர வேண்டிய பஸ்கள் அணி வகுத்து சாலை வரை நின்றது. இதனால் பஸ் நிலையத்திற்கு எதிரில் வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான 2 பஸ்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த போக்குவரத்து பாதிப்பினால் பொதுமக்கள் சிறிது நேரம் அவதிப்பட நேர்ந்தது.