ஆர்.கே.பேட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்


ஆர்.கே.பேட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Aug 2023 1:00 PM GMT (Updated: 11 Aug 2023 1:00 PM GMT)

ஆர்.கே.பேட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 67). இவர் நேற்று காலை வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக தனது காரில் சென்றார். காரை சோளிங்கரை சேர்ந்த ராஜா (38) என்பவர் ஓட்டினார். இவர்கள் சி.எம்.சி.யில் சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பி சோளிங்கருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது வழியில் எதிரே வந்த கார் இவர்கள் வந்த காருடன் பத்மாபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் 2 கார்களின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த சாந்தகுமாரி, காரை ஓட்டி வந்த ராஜா ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றோரு கரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சுப்பிரமணியம் (33) என்பவரும் படுகாயமடைந்தார். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


Next Story