தி.மு.க.வில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களைக் கூட அறிவிக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.


தி.மு.க.வில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களைக் கூட அறிவிக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
x

தி.மு.க.வில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களைக் கூட அறிவிக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருப்பூர்

திருப்பூர்

தி.மு.க.வில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களைக் கூட அறிவிக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மாரத்தான்

டி.டி.வி.தினகரன் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று அதிகாலை திருப்பூர் நல்லூரில் நடைபெற்றது. மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிலில் முன்னேறிய பகுதியாக இருந்த திருப்பூர் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் அணுகி மீண்டும் சிறந்த தொழில் நகராக திருப்பூரை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1989-ம் ஆண்டு முதன்முதலாக எம்.எல்.ஏ., ஆனார். அவருக்கு அவசர கதியில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அமைச்சராக இருந்தார்கள். 1996-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மேயர் ஆனார். அதன்பிறகு 2006-ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆனார்.

தேர்தல் கூட்டணி முடிவு

மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரிய வில்லை. இது அனைவரின் மனதிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களை கூட அறிவிக்கலாம். தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் எல்லாம் கட்சிக்கு பல தலைமுறையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவிகள் கிடைக்கிறது என்று மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டார். அவர் தெரிவித்ததைபோல் தி.மு.க.வில் பலருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களெல்லாம் அமைச்சர் ஆகிறார்கள்.

அ.ம.மு.க.வின் தேர்தல் கூட்டணி குறித்து 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்றால் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்து வைத்தார்களே அவர்களால்தான் முடியும்.

அ.தி.மு.க. வட்டார கட்சி

அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியும், அவரை சேர்ந்த ஒரு குழுவினரும் அதை வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன காரணத்துக்காக கட்சி ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தாரோ, அதை எல்லாம் இன்றைக்கு மாற்றி, மாற்றுப்பாதை அமைப்போம் என்பது போல் அந்த பாதையில் இருந்து விலகி, கடல் போன்ற இயக்கத்தை குட்டை போல் உருவாக்குகிறார்கள். வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி, துணை பொதுச்செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

---


Next Story