பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 2 கன்டெய்னர் லாரிகள் மோதல்: 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்


பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 2 கன்டெய்னர் லாரிகள் மோதல்: 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
x

பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 2 கன்டெய்னர் லாரிகள் மோதியதால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை

சென்னை துறைமுகத்திலிருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு 2 கன்டெய்னர் லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே லாரிகள் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதில், பின்னால் வந்த 2 கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து பின்னால் மோதியது. இதில் 2 கன்டெய்னர் லாரிகளின் முன் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர்களை மீட்டு, ஆம்புலன்சு உதவியுடன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய 2 கன்டெய்னர் லாரிகளையும் பொக்லைன் எந்திரம் கொண்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story