ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணி


ரூ.2 கோடியில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 3 Sept 2023 3:45 AM IST (Updated: 3 Sept 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு தளிப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தளிப்பட்டி, நடுத்தளிப்பட்டி, தெற்கு தளிப்பட்டி முதல் திண்டுக்கல்-கரூர் மெயின் சாலை (தளிப்பட்டி பிரிவு) வரை ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை தெற்கு தளிப்பட்டியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், பாளையம் தி.மு.க. பேரூர் செயலாளர் கதிரவன், வடுகம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரகடம்பகோபு, தி.மு.க. நிர்வாகிகள் சவுந்தர் மாரியப்பன், சுரேஷ், பொன்னுச்சாமி, ராஜமாணிக்கம், மணிவண்ணன், நடராஜ், தங்கமணி, கருப்பையா, குமரவேல், நாகப்பன், சுப்பிரமணி, கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story