பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்


பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
x

பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

வேலூர்

அணைக்கட்டு

பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

வேலூர் அருகே பொய்கை சத்தியமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து உயர்ரக கறவை மாடுகள், சினை மாடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வருகின்றன. இந்த மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமனேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். ஒரு கறவை மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் 2000-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், சினை மாடுகள், காளை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. விவசாயிகள் பயிரிடப்படும் காய் மற்றும் கனிகள் இரவு 9 மணி வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story