2 போலி டாக்டர்கள் கைது


2 போலி டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 3:40 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்

திருவாரூர்

நன்னிலம்:

பேரளம் அருகே ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்

ஓமியோபதி மருத்துவம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 52). இவர், ஓமியோபதி மருத்துவம் படித்து விட்டு அந்த பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

கைது

இதேபோல் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(56). ஓமியோபதி மருத்துவம் படித்துள்ள இவர், கொல்லுமாங்குடியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவரது மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இது குறித்து பேரளம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

பொதுமக்கள் அச்சம்

நன்னிலம் அருகே நேற்று முன்தினம் ஒரு போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரளம் பகுதியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .


Next Story