தனியார் பள்ளியில் 2 மாணவிகள் சானிடைசர் குடித்ததால் பரபரப்பு
அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தனியார் பள்ளியில் 2 மாணவிகள் சானிடைசர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர்
அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தனியார் பள்ளியில் 2 மாணவிகள் சானிடைசர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வில் மதிப்பெண் குறைவு
கோவையை அடுத்த சூலூர் அருகே பட்டணத்தில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் தோழிகள்.
அவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட் டன.
இதில் அவர்கள் 2 பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக தெரி கிறது.
மேலும் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மதிப்பெண் அட்டை வழங்கப்பட்டது.
சானிடைசர் குடித்தனர்
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என்று 2 மாணவிகள் அச்சம் அடைந்தனர். இது பற்றி வீட்டிலும் சொல்லாமலும் இருந்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சானிடைசர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அந்த 2 மாணவிகளும் பள்ளிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து குடிநீரில் சானிடைசரை கலந்து குடித்தனர். இதனால் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் வாந்தி எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்து சகமாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது, தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து சானிடைசரை குடித்து விட்டதாக கூறினர்.
உடனே அந்த 2 மாணவிகளையும் ஆசிரியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சிகிச்சைக்கு பிறகு மாணவிகள் வீடு திரும்பினர். இது குறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.