செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் முழ்கி உயிரிழப்பு


செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் முழ்கி உயிரிழப்பு
x

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் முழ்கி உயிரிழந்தனர். மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு,

சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது44). இவர் மூன்றாவது வாரம் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு உறவினர்களுடன் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு இன்று சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது செங்கல்பட்டு நோக்கி வரும் போது மாமண்டூர் அருகேயுள்ள பாலாற்றை பார்த்துள்ளார். அங்கு ஆர்பரித்து செல்லும் தண்ணீரை பார்த்து உடன் வந்தவர்களுடன் குளிக்க சென்றார்.

அவருடன் உறவினர்கள் மகள்களான 6-ஆம் வகுப்பு படிக்கும் வேதஸ்ரீ (10) என்பவரும், 10-ஆம் வகுப்பு படிக்கும் சிவசங்கரி (15) என்பவரும் உடன் சென்று ஆற்றில் குளிக்க முதலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அவர்களை காப்பாற்ற அவரும் சென்றார். இதனால் நீரில் மூழ்திய சீனுவாசனும் நீரில் மூழ்கினார். இதனால் உடன் வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து சீனிவாசனை தேடும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


Next Story