நள்ளிரவில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு


நள்ளிரவில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
x

நள்ளிரவில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி:

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் மதுரையில் இருந்து திருச்சிக்கு மற்றொரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்கள் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி புறவழிச்சாலையில், சிறிது நேர இடைவெளியில் அடுத்தடுத்து சென்றபோது மர்ம நபர் கல் வீசியதில் 2 பஸ்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இது குறித்து சம்பந்தப்பட்ட பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். நள்ளிரவில் பஸ்கள் மீது கல்வீச்சு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story