நின்று கொண்டிருந்த டவுன் பஸ் மீது மற்றொரு பஸ் மோதல்


நின்று கொண்டிருந்த டவுன் பஸ் மீது மற்றொரு பஸ் மோதல்
x

நின்று கொண்டிருந்த டவுன் பஸ் மீது மற்றொரு பஸ் மோதல்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே நின்று கொண்டிருந்த டவுன்பஸ் மீது மற்றொரு பஸ் மோதிய விபத்தில் 5 பெண் பயணிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

இந்தவிபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்து

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து அரவு டவுன்பஸ் பல்லடம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை ஈரோட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 41) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று காலை 5.30 மணிக்கு காங்கயம்-கோவை சாலையில் அழபிச்சாகவுண்டன் புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல நின்றது.

அப்போது கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை தஞ்சையை சேர்ந்த விஜயகுமார் (49) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் எதிர்பாராத விதமாக டவுன் பஸ்சின் பின் பகுதியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் டவுன் பஸ்சின் பின் பகுதியும், கோவை நோக்கி வந்த அரசு பஸ்சின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

20 பேர் காயம்

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காங்கயம் அரசு மருத்துவமனையில் காயமடைந்த 20 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பஸ்களை அப்புறப்படுத்தி, சாலையில் கிடந்த இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மற்ற பயணிகள் மாற்றுப்பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story