வாலிபர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை


வாலிபர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வழக்கில் வாலிபர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கோவையை அடுத்த சூலூர் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி நடந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஏடிஎம் எந்திரத்தில் திருட முயன்றது வட மாநிலத்தை சேர்ந்த பிஜேந்திரவுராவ் (வயது 22), கோவிந்தரவுராவ் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பிஜேந்திரவுராவ், கோவிந்தரவுராவ் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story