சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது


சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது
x

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம்:

தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் முதல் சேலம் வரை, ரெயில்வே போலீஸ்காரர்கள் பாலமுருகன், இசையரசன், முனுசாமி, பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த பேக்கை எடுத்து பார்த்தபோது அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த யேகியா (வயது 28), சுகில்தேவ் (30) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஒடிசா மாநிலம் பெரம்பூர் என்ற ஊரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிந்தது. பிடிபட்ட அவர்களிடம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story