வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி


வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
x

வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

குடியாத்தத்தை அடுத்த வளத்தூர்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே 69 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர் வளத்தூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜனின் மனைவி வசந்தா (வயது 69) என்றும், சத்துணவு மையங்களில் சமையலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்றும் தெரிய வந்தது.

அதேபோல் திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு பலியானார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வாலிபர் நாட்டறம்பள்ளியை அடுத்த முத்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் சூர்யா (25) என்றும், பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் பெங்களூருக்கு செல்ல இருந்தவர் நேற்று மாலை ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.

மேற்கண்ட இரு சம்பவங்கள் தொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story