ரெயில் மோதி 2 பேர் பலி


ரெயில் மோதி 2 பேர் பலி
x

திருவள்ளூரில் ரெயில் மோதி 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் புட்லூர் ரெயில் நிலையங்களுக்கிடையே நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த நபர் சிகப்பு கலரில் டீ சர்ட், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார்.அதேபோல திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் நெமிலிச்சேரி ரெயில் நிலையம் இடையே நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story