தினமும் 2 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பயிற்சி


தினமும் 2 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பயிற்சி
x
தினத்தந்தி 6 Aug 2023 1:15 AM IST (Updated: 6 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் - பொதுமக்களுக்கு தினமும் 2 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பயிற்சியை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர்


கோவை


போலீஸ் மற்றும் பொதுமக்கள் உடல்நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி 48 நாட்கள், தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடும் பயிற்சியை போலீஸ் பயிற்சி மைதானத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். அவர், போலீசார் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், போலீசாரும், பொது மக்களும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து 48 நாட்கள் ஓட்டப்பயிற்சி செய்தால் அது வாழ்வில் ஒரு பழக்கமாகவே மாறி விடும். இதனால் போலீசா ருக்கு மன அழுத்தம் குறைந்து, உடல் நலம் மேம்படும் என்றார்.

கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டப்பயிற்சியில் பங்கேற்க முதற்கட்டமாக 1000 போலீசார் முன்வந்து உள்ளனர். இதேபோல் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் தங்களுக்கு விருப்பமான இடங்களில் தினமும் 2 கிலோ மீட்டர் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



Next Story