கல்வராயன்மலையை சேர்ந்த சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கல்வராயன்மலையை சேர்ந்த சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:37 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையை சேர்ந்த சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட மேல்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 43). அரண்மனை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சத்தியராஜ் (27). சாராய வியாபாரிகளான இவர்கள் இருவரும் மேல்வாழபாடி மற்றும் அரண்மனை புதூர் கிராம வடக்கு ஓடைப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தபோது, கரியாலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களது குற்ற செயலை தடுக்கு பொருட்டு, 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரில் கரியாலூர் போலீசார், செல்வராஜ், சத்யராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story