2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சோழபுரம் துலுக்கவெளி காலனிதெருவை சேர்ந்தவர் ரஜினி மகன் நரேஷ் (வயது 22). திருவிடைமருதூர் தாலுகா லட்சுமிகுடி நடுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் உமர்பாரூக் என்ற விஷ்வா (23). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து நரேஷ், உமர்பாரூக் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா, குண்டர் சட்டத்தில் நரேஷ், உமர்பாரூக் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story