கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெலட்டூர் அருகே இரும்புதலை பகுதியில் மெலட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அதன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூண்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நாகேஷ் மகன் முத்து (வயது27), பெருமாள் மகன் ஏழுமலை (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்து, ஏழுமலை ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து, ஏழுமலை ஆகிய 2 பேரையும் கைது செய்து, 20 கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா விற்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.