ரேஷன் அரிசி கடத்திய மேலும் 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய மேலும் 2 பேர் கைது
x
சேலம்

சேலம்:-

சேலம் செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்ரமணியம், குகையை சேர்ந்த நடேசன், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷாமால், பசந்த் மானா ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரியுடன் 3 டன் ரஷேன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய கடையின் விற்பனையாளரான முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயந்திமாலா (வயது 45), எடையாளரான மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிசாமி (54) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஜெயந்திமாலா, பழனிசாமி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story