இரட்டை கொலையில் மேலும் 2 பேர் கைது


இரட்டை கொலையில் மேலும் 2 பேர் கைது
x

அருப்புக்கோட்டை அருகே இரட்டை கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே இரட்டை கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரட்டைக்கொலை

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்தவர் ராக்கம்மாள் (வயது 52). இவர் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினையில் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை வழக்கில் திருச்சுழி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சுழி அருகே உடையனாம்பட்டியை சேர்ந்த சபரிமலை (36) என்பவர் ஜாமீனில் வெளியே வந்து அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூரில் உள்ள தனது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் (32) என்பவர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த25-ந்தேதி அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே காட்டுப்பகுதியில் சபரிமலை(36), ரத்தினவேல்பாண்டியன்(32) ஆகிய இருவரும் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தில் 10 மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் 2 பேர் கைது

அப்போது இந்த இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே 3 வாலிபர்கள் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களை மேலும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர்கள் மதுரை பெருங்குடியை சேர்ந்த அஜித்குமார் (35) மற்றும் மதுரை திருப்பாலையை சேர்ந்த சுந்தரம் (22) என்பதும் அருப்புக்கோட்டையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story