சேலத்தில் மேலும் 2 பேர் கைது


சேலத்தில் மேலும் 2 பேர் கைது
x

நல்லம்பள்ளி அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் சேலத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம்

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் சேலத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தனிப்படை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி பெரியகரடு வனப்பகுதியில் உள்ள கல்குவாரி பகுதியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்பாய் (வயது 47) மற்றும் திருவனந்தபுரம் வெள்ளாத்துக்காடு பகுதியை சேர்ந்த நிவீல்குருஸ் (58) ஆகியோர் கடந்த 19-ம் தேதி உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இறந்த 2 பேரும் வாகனங்கள் வாங்கி விற்பது மற்றும் நிலங்களை வாங்கி விற்கும் தொழிலை கூட்டாக செய்து வந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் கொலையாளிகளை கண்டறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

சிறையில் அடைப்பு

இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் (22), சுரேஷ்பாபு (34), விஷ்ணுவர்மன் (24) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரகு (42) ஆகிய 4 பேர் கடந்த 22-ந் தேதி தென்காசி மாவட்டம் செங்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் என்ற அபு (37) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு அதியமான்கோட்டை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட 6 பேரும் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையா? அல்லது இவர்களுக்கு இந்த வழக்கில் உள்ள சம்பந்தம் உள்ளிட்டவை குறித்து அறிய 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story