டாஸ்மாக் பாரில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


டாஸ்மாக் பாரில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

டாஸ்மாக் பாரில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள சேனியகல்லுக்குடியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் பாபு(வயது 28). மாலை கட்டும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சமயபுரம் நால்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது, அவருக்கும் வீ.துறையூரை சேர்ந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த கும்பல் பாபுவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை வெட்டிய நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், வீ.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நீலமேகத்தின் மகன்கள் வெங்கடாஜலபதி(25), கணேசன் (24), விநாயகமூர்த்தி (23) ஆகிய 3 பேர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் கோர்ட்டில் சரணடைந்தனர். நேற்று முன்தினம் வீ.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜு என்ற ராஜீவ்காந்தி(36), மாகாளிகுடி புதுராஜா தெருவை சேர்ந்த வேல்முருகனின் மகன் அருண் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேசின் மகன் ராமு (23) ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மாகாளிகுடியை சேர்ந்த அலெக்ஸ், புதுராஜா தெருவை சேர்ந்த லெட்சுமணன் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story